வடக்கில் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் இரண்டாம் தவணைப் பாடசாலை இன்று ஆரம்பமான போதிலும் மாணவர்களின் வரவு பெரிதும் குறைந்த நிலையிலையே காணப்படுகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து இரண்டாம் தவணைப் பாடசாலைகள் ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டிருந்தன. இதனை அடுத்து பாடசாலைகளில் கடும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று மீளவும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் புத்தகப் பைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் இராணுவம், பொலிஸார் இணைந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மாணவர்கள் பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதேவேளை, நாடாளாவிய ரீதியில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணம் முழுவதும் பாடசாலைகளில் கடும் பாதுகாப்புக்கள் போடப்பட்டிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.