Header image alt text

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்றைய தினம் அவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த மனு இன்று நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. Read more

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவிக்காதிருப்பதற்கு ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பொலிஸாரின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள அப்துல் மஹீட் மொஹமட் நியாஸ் என்ற சந்தேகநபரை பிணையில் விடுதலை செய்வதற்கு இலஞ்சம் வழங்க முற்பட்டார். Read more

சீதுவ பொலிஸார் மற்றும் விமானப்படையினர் இணைந்து முதுவாடிய பிரதேசத்தில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது, வலப்பனையிலிருந்து சீதுவ நோக்கி பயணஞ்செய்த லொரியொன்றை வ​ழிமறித்து சோதனையிட்ட போது, அதனுள்ளிருந்து 1,116 இராணுவ சீருடைகளை ஒத்த உடைகள் காணப்பட்டதாப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த உடைகளுடன் லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றவருவதாகவும் தெரிவித்தனர்.

கொழும்பு மாலிகாவத்தை – கெத்தாராமை விளையாட்டரங்குக்கு அருகாமையில் பள்ளிவாயிலின் அருகில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து 46 வாள்களும், துப்பாக்கி ரவைகள் ஒரு தொகையும், துப்பாக்கியொன்றும் உள்ளடங்கலாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட பொருள்களனைத்தும் ஒரு சாக்குப்பையில் போடப்பட்டு குறித்த கிணற்றுக்குள் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more