சீதுவ பொலிஸார் மற்றும் விமானப்படையினர் இணைந்து முதுவாடிய பிரதேசத்தில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது, வலப்பனையிலிருந்து சீதுவ நோக்கி பயணஞ்செய்த லொரியொன்றை வ​ழிமறித்து சோதனையிட்ட போது, அதனுள்ளிருந்து 1,116 இராணுவ சீருடைகளை ஒத்த உடைகள் காணப்பட்டதாப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த உடைகளுடன் லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றவருவதாகவும் தெரிவித்தனர்.