கொழும்பு மாலிகாவத்தை – கெத்தாராமை விளையாட்டரங்குக்கு அருகாமையில் பள்ளிவாயிலின் அருகில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து 46 வாள்களும், துப்பாக்கி ரவைகள் ஒரு தொகையும், துப்பாக்கியொன்றும் உள்ளடங்கலாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட பொருள்களனைத்தும் ஒரு சாக்குப்பையில் போடப்பட்டு குறித்த கிணற்றுக்குள் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் குறித்த பையிலிருந்து போதைப்பொருள் என சந்தேகிக்கக்கூடிய வகையிலான பக்கற்று ஒன்றும் காணப்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்ததோடு, குறித்த பகுதியில் மேலதிக சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.