Header image alt text

கொழும்பு, கொச்சிக்கடை கிறிஸ்துவ தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியின் சகோதரன் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர். Read more

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் நேரடி தொடர்புடையவர்களெனக் கருதப்படும் 8 பேரை குருநாகலில் வைத்து கைது செய்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேலும் 108 பேரை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, குறித்த நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொச்சிக்கடையில், புனித அந்தோனியார் ஆலயத்தில் ஏற்படுத்திய குண்டுதாக்குதலின் தாக்குதல்தாரி, கிங்கஸ்பெரி ஹோட்டலில் தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிக்குச் சொந்தமான வாகனத்தில் ஏறி வருகைதந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படையினர் தேசிய பொறுப்பை துறந்துச் செயற்பட தயாரில்லை என தெரிவிக்கும் கடற்படையின் பேச்சாளர்  லுதினர் கமான்டர் இசுறு சூரிய பண்டார, சிலாவத்துறையில் அமைந்துள்ள கடற்படை முகாமை அகற்ற  தயாரில்லை எனவும் தெரிவித்தார்.

ஊடகமொன்றுக்கு இது தொடர்பில்  மேலும் தெரிவித்த அவர்,   உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களுக்குப் பின்னர், பாதுகாப்புத் தரப்பின் சோதனை செயற்பாடுகளுக்கு கடற்படை முழுமையான ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் தெரிவித்தார். Read more