ஐ.எஸ் பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் பதிவிட்ட மௌலவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, செட்டிக்குளம் முதலியாகுளத்தில் வசித்துவரும் முனாஜிப் மௌலவி என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த முனாஜிப் மௌளவி கடந்த ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பாக தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ள காணொளியை வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மௌலவி சவுதி அரேபியாவிலிருந்து இன்று காலை நாடு திரும்பியபோது விமான நிலையத்தில் கைதாகியுள்ளார்.