பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் உரைநிகழ்த்தி, அதை காணொளி மூலமாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய மௌலவியான முனாஜிப் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மக்காவுக்கு சென்று நாடு திரும்பும்போதே நேற்றைய தினம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் வவுனியா, செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் ஆவர்.அத்துடன் அவரை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.