பாதுகாப்பான சூழ்நிலையை காரணம் காட்டி எந்த தரப்பினராவது தேர்தலை பிற்போட எதிர்ப்பார்ப்பார்களாயின் அது தீவிரவாதத்திற்கு சமாந்தரமானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு நிலைமையை காரணம் காட்டி தேர்தலை பிற்போடுவதற்கான அவசியம் இல்லை. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட வேண்டியதே இன்றைய காலக்கட்டத்தின் அடிப்படை செயற்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, மாகாண சபை தேர்தலை தீர்மானித்தமைக்கு அமைய ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நடத்த முடியாது போனால், ஜனவரி 27ம் திகதி தாம் வெளியிட்ட கருத்துக்கு அமைய பதவி விலக நேரிடும் என மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.