Header image alt text

நாடளாவிய ரீதியில் இன்று இரவு 9 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை மறு அறிவித்தல் வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் வட மேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்றுமாலை தெரிவித்திருந்தார். Read more

புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் அம்பாறை காரைதீவு பாடசாலைப் பிள்ளைகள் ஐவருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. காரைதீவு ஆர்.கே.எம் பெண்கள் பாடசாலையின் செல்வராசா யனுசா (தரம் 8), விஜயபாகு லுக்ஷாந்தி (தரம் 8), தேவராஜா மிதுஷா (தரம் 7) மற்றும் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் ரதீஸ்வரன் கிஜேந்தன் (தரம் 8) மனோகரன் சினோஜன் (தரம் 6) ஆகியோர்க்கு

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. வி.ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தை அமரர் விஜயநாதன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவாக வழங்கிய நிதியில் இவை வழங்கப்பட்டன. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினருமான ம.சிவநேசன் (பக்தன்) அவர்கள் கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார்.
Read more

குளியாபிட்டி – ஹெட்டிபொல – பிங்கிரிய மற்றும் தும்மலசூரிய பிரதேசங்களுக்கும் நாளை அதிகாலை 4 மணி வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4 மணி வரையில் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை ரஸ்நாயக்கபுர மற்றும் கொபேய்கனே ஆகிய காவல்துறை பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more

தடை செய்யப்பட்டிருக்கும் முகத்தை முழுவதுமாக மறைக்கும் விதத்திலான ஆடையை அணிந்து இறுதிச் சடங்கில் பங்குபற்றியிருந்த தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிலாபம் ஜயபிம பிரதேசத்தில் வைத்து இறுதிச் சடங்கொன்றில் கலந்துகொண்டிருந்த பெண்ணொருவர் முகத்தை முழுவதுமாக மறைத்தவாறு தனது கணவருடன் வருகைதந்துள்ளார். எனினும், இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருந்த சிலர் குறித்த ஆடையை மாற்றிவிட்டு வருமாறு அறிவுறித்தியுள்ளனர். எனினும், அவர் மறுத்தமையால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. Read more

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனா நோக்கி பயணித்துள்ளதன் காரணமாக இவ்வாறு ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய கோடீஸ்வர வர்த்தகரான, மொஹமட் இன்சாக் அஹமட்டின் வெல்லப்பிட்டிய தொழிற்சாலையில் வைத்து கைதுசெய்யப்பட்ட, கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லாவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு, கொழும்பு மேலதிக நீதவான் ஆர். எம்.பி. நெலும்தெனிய இன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு அனுமதியளித்துள்ளார்.

கருப்பையா கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லா இந்த வெடிப்புச் சம்பவத்தின் 10ஆவது சந்தேகநபரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் 14, 15ஆம் திகதிகளில் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு, சிறைச்சாலைகள் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள சிவபுரம் காட்டுப்பகுதியிலிருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றுகாலை அப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு பகுதியிலிருந்தே ரி 56 ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற விஷேட அதிரடிப்படையினர் அதனை மீட்கும் நடவடிக்கையினை பொலிசாருடன் இணைந்து மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையிலான இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பமாகின்றது. அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எம்.எம்.ரட்நாயக்க தெரிவித்தார்.

தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான மாணவர்களின் இரண்டாம் தவணை பாடசாலை கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது. (அரசாங்க தகவல் திணைக்களம்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனாவுக்கு பயணமாகியுள்ளார்.

இன்றுகாலை 7.35 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து யூ.எல். 302 என்ற ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்ட ஜனாதிபதி, நேரடியாக சிங்கப்பூருக்கு சென்று, அங்கிருந்து சீனாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் மீண்டும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையில் அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் வட்ஸ்அப், வைபர் மற்றும் முகப்புத்தகம் ஆகியவை இவ்வாறு தடை விதிப்பட்டுள்ளது.