ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனாவுக்கு பயணமாகியுள்ளார்.

இன்றுகாலை 7.35 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து யூ.எல். 302 என்ற ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்ட ஜனாதிபதி, நேரடியாக சிங்கப்பூருக்கு சென்று, அங்கிருந்து சீனாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் அவருடன் 27 பேரடங்கிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.