தடை செய்யப்பட்டிருக்கும் முகத்தை முழுவதுமாக மறைக்கும் விதத்திலான ஆடையை அணிந்து இறுதிச் சடங்கில் பங்குபற்றியிருந்த தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிலாபம் ஜயபிம பிரதேசத்தில் வைத்து இறுதிச் சடங்கொன்றில் கலந்துகொண்டிருந்த பெண்ணொருவர் முகத்தை முழுவதுமாக மறைத்தவாறு தனது கணவருடன் வருகைதந்துள்ளார். எனினும், இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருந்த சிலர் குறித்த ஆடையை மாற்றிவிட்டு வருமாறு அறிவுறித்தியுள்ளனர். எனினும், அவர் மறுத்தமையால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் கணவன், மனைவி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். 

இதேவேளை புர்கா மற்றும் ஹபாயா அணிந்து அலுவலகத்தில் கடமையாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, புத்தளம் பிரதேச செயலக ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அலுவலக சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்துள்ளன.