Header image alt text

நாடளாவிய ரீதியில் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். Read more

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய, வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலை உரிமையாளர் மொஹம்மட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட்டுக்காக பிரார்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட வந்ததாக சந்தேகிக்கப்படும் மௌலவி உட்பட ஐவர் கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்றுமாலை கொள்ளுபிட்டியில் உள்ள மொஹம்மட் இப்ராஹீம் அன்ஷாப் அஹமட்டின் மனைவின் வீட்டில் வைத்து அவர்களைக் கைதுசெய்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். Read more

உயிர்த்த ஞாயிறன்று கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட அலாவுதீன் அஹமட் முவாத்தின் தலை பகுதி தனது மகனுடையது என அவரின் பெற்றோர் இனங்கண்டுள்ளனர்.

குறித்த தற்கொலை குண்டுதாரியின் மரண விசாரணை கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இவ்விடயம் தெரியவந்துள்ளது. மட்டக்குளியைச் சேர்ந்த தற்கொலை குண்டுதாரியின் தந்தை தனது சாட்சியில், உயிரிழந்துள்ள 22 வயதான தனது மகன் சட்டம் குறித்த ஆரம்ப கல்வியை முடித்தவர் என குறிப்பிட்டுள்ளார். Read more

வடமேல் மாகாணத்தில் நேற்றைய தினம் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை இன்றுமாலை 4.00 மணிக்கு தளர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்று மாலை 6.00 மணி தொடக்கம் நாளை காலை 6.00 மணிவரை மீண்டும் வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. Read more

இலங்கையில் காணப்படும் தற்போதைய நிலவரத்தை உரியமுறையில் கையாளாவிட்டால் தற்போதைய வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் சிறுபான்மை மதத்தவர்களிற்கு எதிராக இடம்பெறும் தாக்குதல்கள் குறித்தும் ஐ.நா. கவலை வெளியிட்டுள்ளது. இனப்படுகொலையை தடுப்பதற்கான ஐ.நா.வின் விசேட ஆலோசகர் அடமா டைங் மற்றும் பாதுகாப்பதற்கான பொறுப்பு குறித்த ஐ.நா.வின் விசேட ஆலோசகர் கரன் ஸ்மித் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளனர். Read more

இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி குறித்த விசேட மூன்று உடன்படிக்கைகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சீன அரசாங்கத்திற்கு இடையில் இன்று கைச்சாத்திடப்படவுள்ளன.

அந்நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்தநிலையில், இதன்போது அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டுள்ளது. Read more

தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாதே மில்லதே இப்ராஹீம் மற்றும் வில்லயத் அஸ் ஸெய்லானி ஆகிய மூன்று அமைப்புக்களும் தடை செய்யப்பட்டமை தொடர்பான வர்த்தமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் நேற்றைய தினம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த் அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கையில் முதன்முறையாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் இன்று முதன்முறையாக தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களின் ஊடாக தவறான மற்றும் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பகிர்வதை தடுப்பதற்காகவே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் பேஸ்புக், வட்ஸ் அப், வைபர், ஐ.எம்.ஒ.,ஸ்னப்சட், இன்ஸ்டர்கிராம், யூடியூப் ஆகிய சமூக ஊடகங்களின் செயற்பாடுகளை மறுஅறிவித்தல் வரை தொலைத்தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு முடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக் காரணமாக நேற்று நாடு முழுவதுமாக பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை வடமேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இருந்தபோதும், மாணவர்களின் பாதுகாப்பு நிமித்தம் வடமேல் மாகாண பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது.

வவுனியாவில் இரண்டு வாள்களுடன் வர்த்தகர் ஒருவர் நேற்றுமாலை கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள ஹாட்வெயார் ஓன்று இராணுவத்தினரால் 2 மணித்தியாலயம் சோதனையிடப்பட்டது.

இதன்போது குறித்த ஹாட்வெயாரில் இருந்து இரண்டு வாள்கள் மீட்கப்பட்டது. இதனையடுத்து குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். Read more