இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி குறித்த விசேட மூன்று உடன்படிக்கைகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சீன அரசாங்கத்திற்கு இடையில் இன்று கைச்சாத்திடப்படவுள்ளன.

அந்நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்தநிலையில், இதன்போது அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி மேற்கொண்ட விசேட கோரிக்கைக்கு அமைய காவல்துறை திணைக்களத்திற்காக புதிய ஜீப்வண்டிகள் நூறை வழங்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

இதனுடன் நாளை பிஜிங்கில் ஆரம்பமாகவுள்ள ஆசிய நாகரிகங்கள் குறித்த சர்வதேச மாநாட்டில், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.