கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய, வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலை உரிமையாளர் மொஹம்மட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட்டுக்காக பிரார்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட வந்ததாக சந்தேகிக்கப்படும் மௌலவி உட்பட ஐவர் கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்றுமாலை கொள்ளுபிட்டியில் உள்ள மொஹம்மட் இப்ராஹீம் அன்ஷாப் அஹமட்டின் மனைவின் வீட்டில் வைத்து அவர்களைக் கைதுசெய்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த மௌலவி ஒருவரும் மாளிகாவத்தையைச் சேர்ந்த நால்வருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து முச்சக்கர வண்டியொன்றையும் வீட்டில் இருந்து ட்ரோனர் கமரா ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.