புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி நேற்று இராணுவ தளபதியை இராணுவ தளபதியின் பணிமனையில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இலங்கை இராணுவ அதிகாரிகளுக்காக அவுஸ்திரேலியாவில் வழங்கப்படக்கூடிய பயிற்சிகள் மற்றும் பங்களிப்புகள் தொடர்பான சாத்தியக்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. சகல பங்குதாரர்களுக்கும் சமுதாயத்தின் ‘தீவிர -மயமாக்கலுக்கு’ பயன்படுத்தப்படும் ஒரு பொறிமுறையை அமுல்படுத்துவது தொடர்பாகவும் இளைஞர்களை வன்முறை சுழற்சியில் இருந்து அகற்றுவதற்கான தேவையை சுட்டிக்காட்டியும், இலங்கைக்கு உதவ அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பை தருமாறு இராணுவ தளபதி இதன்போது வலியுறுத்தினார்.

அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினர்கள் வருடாந்தம் இடம்பெறும் ‘கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு’ மற்றும் கூட்டுப்படை அப்பியாச பயிற்சிகளிலும் பங்கு பெறுவதற்கு வருகை தருமாறு இராணுவ தளபதி உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள் விடுத்தார். உயர்ஸ்தானிகர் உதிர்த்த ஞாயிறின் பின்பு ஏற்பட்ட கவலைக்கிடமான விடயத்தை முன்னிட்டு நாட்டின் பாதுகாப்பான வளர்ச்சிக்கு தனது ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்தார்.

இச்சந்திப்பின் இறுதியில் இராணுவ தளபதியினால் உயர்ஸ்தானிகருக்கு நினைவுச் சின்னமும் பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் உயர்ஸ்தானிகரினால் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் கையொப்பமிட்டு விடைபெற்றுச் சென்றார். இச்சந்தர்ப்பின் போது இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் ருவன் டீ சில்வா, அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியும் இணைந்து கொண்டனர்.