வடமேல் மாகாணத்தில் நேற்றைய தினம் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை இன்றுமாலை 4.00 மணிக்கு தளர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்று மாலை 6.00 மணி தொடக்கம் நாளை காலை 6.00 மணிவரை மீண்டும் வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. இந்த வகையில் இன்று இரண்டு மணித்தியாலங்கள் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.