அரச பாடசாலைகளின் கனிஷ்ட மாணவர்களுக்கான 2ம் தவணை இன்று ஆரம்பித்த போதிலும், மாணவர்களின் வருகை குறைந்த அளவிலேயே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து, பாடசாலைகளின் செயற்பாடுகள் ஒத்திவைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து தரம் 6 முதல் தரம் 13ம் வரையான மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன. எனினும் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சிறந்த முறையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கை பிரதிநிதி டிம் சட்டன் நேற்றைய தினம் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்கர் வணக்கத்திற்குரிய வரகாகொட ஞானரத்ன தேரை சந்தித்துள்ளார்.

இதன்போது பாடசாலைக்கு மாணவர்கள் சமூகமளிக்காமை தொடர்பில் கலந்துரையாடியதாக சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.