Header image alt text

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வந்த சந்தேகநபர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொச்சிக்கடை பிரதேசத்தில் வைத்து வெடிக்கவைக்கப்பட்ட குண்டு பொருத்தப்பட்டிருந்த வாகனத்தை, கொள்வனவு செய்ய உதவியமை மற்றும் அதன் ஆசனங்களை அமைக்க உதவிய நபரே காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து, பொலிஸாரல் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

வடமேல் மாகாணத்துக்கும் கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களுக்கும் இன்று இரவு 7 மணியிலிருந்து பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று இரவு 7 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு இன்று ஊரடங்கு அமுல்படுத்தப்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் சீன பிரதமர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்றுபிற்பகல் பீஜிங் நகரில் இடம்பெற்றது. இலங்கையில் இடம்பெற்ற எதிர்பாராத பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தனது அனுதாபங்களை தெரிவித்த சீன பிரதமர்,

இலங்கை சீன ஜனாதிபதிகளுக்கிடையிலான கலந்துரையாடலின்போது இணக்கம் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக தாம் அதிக கவனம் செலுத்தியுள்ளதோடு, பயங்கரவாத சவால்களை வெற்றிகொள்வதற்கு சீன அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொடுக்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார். Read more

வடமேல் மாகாணத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வடமேல் மாகாணத்தில் மாத்திரம் இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குசேகர கூறியுள்ளார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தலைநகர் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை மையப்டுத்தி இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 10 பெண்கள் உள்ளிட்ட 85 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.
Read more

குருநாகல் மாவட்டடம் குளியாப்பிட்டி பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட மூவர், உடன் அமுலுக்கு வரும் வகையில், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதற்கமைய, ஹொஷான் ஹேவாவிதாரன குளியாப்பிட்டி பொலிஸ் நிலையத்திலிருந்து களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பிரதி பணிப்பாளராகவும், நுகேகொட பொலிஸ் அதிகாரி எல்.எஸ்.சிகேரா குளியாப்பிட்டி பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரியாகவும், Read more

யாழ். அராலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் வைத்து ஆசிரியை ஒருவர் மீது இருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அராலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் இன்று காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது பாடசாலைக்கு அருகிலுள்ள ஒழுங்கைக்கு அருகில் ஆசிரியையை வழிமறித்த இருவர் ‘மாணவர்கள் இருவர் பாடசாலைக்கு செல்லாது ஒழுங்கைக்குள் நிற்கிறார்கள்’ என கூறியுள்ளனர்.
Read more

அவுஸ்திரேலியாவிற்கு அருகில் உள்ள பப்புவா நியூகினியா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பப்புவா நியூகினியா மற்றும் சொலமன் தீவுகளில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கோகோபோ தீவின் அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.5 ரிச்டர் அளவு கோலில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மேற்கண்ட தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

யாழ்ப்பாணம், கச்சாய் பாலாவி தெற்கில் இடம்பெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலாவி தெற்கிலுள்ள வீடொன்றுக்குள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த கும்பல் வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தங்கராசா நிறோஸ் (வயது 28), தங்கராசா ரஜீவன் (வயது 27) மற்றும் மயூரன் நிரோஷினி (வயது 32) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more

வவுனியா சாளம்பைக்குளம் பள்ளிவாசலுக்கு முன்பகுதியில் நேற்று இரவு மர்மப் பொதியொன்று காணப்பட்டதையடுத்து அப்பகுதியில் ஒரு பதற்றமான சூழல் காணப்பட்டது.

சாளம்பைக்குளம் பள்ளிவாசலை அண்மித்துள்ள பாலத்தின் அருகே கைவிடப்பட்ட நிலையில் மர்மப் பொதி ஒன்று காணப்படுவதாக நேற்று இரவு பூவரசங்குளம் பொலிஸாருக்கு இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது. இந்நிலையில், இரகசிய தகவலையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸாரும் இராணுவத்தினரும் குறித்த மர்ம பொதியினை சோதனையிட்டுள்ளனர். Read more