குருநாகல் மாவட்டடம் குளியாப்பிட்டி பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட மூவர், உடன் அமுலுக்கு வரும் வகையில், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதற்கமைய, ஹொஷான் ஹேவாவிதாரன குளியாப்பிட்டி பொலிஸ் நிலையத்திலிருந்து களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பிரதி பணிப்பாளராகவும், நுகேகொட பொலிஸ் அதிகாரி எல்.எஸ்.சிகேரா குளியாப்பிட்டி பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரியாகவும், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றிய டபிள்யூ.எம்.ஏ.ஆர் பெர்ணான்டோ நுகேகொட பொலிஸ் பிரிவுக்கும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.