வடமேல் மாகாணத்துக்கும் கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களுக்கும் இன்று இரவு 7 மணியிலிருந்து பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று இரவு 7 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு இன்று ஊரடங்கு அமுல்படுத்தப்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.