Header image alt text

இம்முறை வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 762 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

இந்நிகழ்வு எதிர்வரும் 18ம் திகதி காலை 10.00 மணிக்கு வெலிக்கட சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெற உள்ளது. இதல் 26 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை வரலாற்றில் ஒரே தடவையில் அதிகளவிலான சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ராவணா பலய மற்றும் சிங்கள ராவய உள்ளிட்ட அமைப்புக்களில் அங்கம் வகிக்கும் தேரர்கள் குழுவொன்று வணிக, கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை கைதுசெய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இந்த அடிப்படைவாத தாக்குதல்களின் பின்னணியில் உள்ளனர் என்பதற்கு ஆதரங்கள் உள்ளன. இது தொடர்பில் நாம் அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியபோதிலும் இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. Read more

இலங்கையின் சில பிரதேசங்களில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பல கவனம் செலுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்கின்றமை தொடர்பில், பாராட்டுக்களைத் தெரிவிப்பதாகவும், இலங்கையின் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலை நாட்டுமாறும் ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்காக வெறுப்பு, வன்முறை என்பவற்றை சமூகத்திலிருந்து இல்லாதொழிப்பது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் ஆயுதப் பயிற்சியில், இலங்கையர்கள் மூவர் ஆயுதப் பயிற்சி எடுத்து வருவதாகவும் அவர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட 40 லட்சம் ரூபாய் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால், கொழும்பு மேலதிக நீதவான் தனூஜா ஜயதுங்கபவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்துகொள்வதற்காக, இலங்கையிலிருந்து முதன்முதலில் சென்றவரெனக் கருதப்படும் மொஹமட் முஹூசித் இஷாக் அஹமட் மற்றும் அவரது சகோதரரான சர்ஃபாஸ் நிலாம் ஆகிய இருவரும் மற்றொரு இலங்கையரான மொஹமட் அரூஸ் மொஹமட் சுஹைர் ஆகிய மூவரும், Read more

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்குள்ளும் பல்கலைக்கழக வளாகத்திலும் குண்டுகள் வெடிக்கவுள்ளதாக, பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கு தொலைபேசியில் மிரட்டல் மாணவனொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தில் இறுதி வருடத்தில் கல்வி கற்கும் மாணவரே இவ்வாறு நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள உபவேந்தரின் அலைபேசிக்கு இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டமைத் தொடர்பில், பல்கலைக்கழகத்தின் பிரதான பாதுகாப்பு அதிகாரி, மிரிஹான பொலிஸ் நிலையத்தில் செய்த முறைபாட்டுக்கமைய சந்தேகநபரான மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய சந்தேகத்தின் பேரில் மொஹமட் ரிஷ்வான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளை – மாபொல பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் அமைதியான நிலைமை காரணமாக, இன்றைய தினம் நாட்டின் எந்த ஓர் பிரதேசத்திலும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று பாராளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிர்க்கட்சி உள்ளிட்ட 64 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை விரைவாக ஆரம்பிக்கும்படி கூட்டு எதிர்க்கட்சி சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். Read more

புகலிடம் மற்றும் அரசியல் தஞ்சம் கோரி, 1670 வெளிநாட்டு புகலிடக்கோரிக்கையாளர்கள் இலங்கையில் தங்கியிருப்பதாக, ஐ.நாவின் புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பான உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கடந்த மார்ச் 31ஆம் திகதி வரை இலங்கையில் புகலிடம், அரசியல் தஞ்சம் கோரி வந்த 851 பேரும், அரசியல் தஞ்சம் கோரி 819 பேர் இலங்கையில் தங்கியிருப்பதாகவும், ஐ.நாவின் புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பான உயர்ஸ்தானிகர் அலுவலகம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read more

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் பீட்டர் போல்ட் முன்னிலையில் பிரசன்னப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனுடன் அவர்களை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கோப்பாய் காவல்துறையில் முன்னிலையாகுமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார்.

கடந்த 13ம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சீனா நோக்கி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதேநேரம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சீன பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் பீஜிங் நகரில் இடம்பெற்றது. Read more