ராவணா பலய மற்றும் சிங்கள ராவய உள்ளிட்ட அமைப்புக்களில் அங்கம் வகிக்கும் தேரர்கள் குழுவொன்று வணிக, கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை கைதுசெய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இந்த அடிப்படைவாத தாக்குதல்களின் பின்னணியில் உள்ளனர் என்பதற்கு ஆதரங்கள் உள்ளன. இது தொடர்பில் நாம் அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியபோதிலும் இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவர்கள் இருவரும் உடனடியாக கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் இந்த பிரச்சினைக்கான தீர்வினைக் காணமுடியும் எனவும் அந்த அமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.