இலங்கையில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டணமின்றி சிகிரியாவை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. விசாக பூரணை, தேசிய தொல்பொருள் தினம் என்பவற்றை முன்னிட்டு இந்த வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளதாக சிகிரியா திட்ட முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மக்கள் கட்டணமின்றி சிகிரியாவை பார்வையிட முடியும் என்பதுடன், சிகிரியாவில் அகழ்வு பணிகளின்போது கிடைத்த தொல்பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பகுதிகளையும் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிகிரியாவில் பாதுகாப்புக்காக இராணுவத்தினர், விமான படையினர் மற்றும் சிகிரியா பொலிஸார் ஆகியோர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.