பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய சந்தேகத்தின் பேரில் மொஹமட் ரிஷ்வான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளை – மாபொல பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் அமைதியான நிலைமை காரணமாக, இன்றைய தினம் நாட்டின் எந்த ஓர் பிரதேசத்திலும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை ஊடக பேச்சாளர் காவற்துறை அத்தியச்சகர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.