Header image alt text

கொழும்பு, ஷங்கரில்லா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான மொஹமட் சஹ்ரான் பயிற்பெற்றதாகக் கூறப்படும் பயிற்சி முகாமொன்று, கண்டி, அருப்பல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பிரதேசத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கடந்த பல நாள்களாக தொடர்ச்சியாக மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பயனாக, மேற்படி முகாம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. Read more

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் சம்பவங்களை அடுத்து, இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலொன்றின் போது, தெஹிவளை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேநபர் தொடர்பில், அமைச்சர் ரிஷாட் பதியூதீன், இரண்டு தடவைகள் தன்னுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உதவி கோரியதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கோரியது உதவியே தவிர, இதனை ஓர் அழுத்தமாக எவரும் பார்க்கவேண்டாமெனவும், இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். Read more

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்த 2 பேர் ஹொரவபொத்தான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினரால் குறித்த நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குல்களுடன் தொடர்புடைய சஹ்ரானுடைய நண்பர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதான 78 பேரில் 20 பேர் அதனுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த 20 பேரிடமும் தற்போது விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கைதானவர்களிடம் பெறப்படும் தகவல்களுக்கு அமைய மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பேயோ இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவை இன்று சந்தித்துள்ளார். இலங்கையில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு எதிரான அமெரிக்காவின் கண்டனத்தை இராஜாங்க செயலாளர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த தாக்குதல்களில் ஐந்து அமெரிக்கர்களும் கொல்லப்பட்டிருந்தனர். அத்துடன், பயங்கரவாத்திற்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் உறுதியான ஆதரவையும் அவர் மீள வலியுறுத்தியுள்ளார். Read more

நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலைகளிலும், பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகையில் ஓரளவுக்கு முன்னேற்றம் எற்பட்டுள்ளது.

அதனை அதிகரிப்பதற்கு பெற்றோரும் கல்வியமைச்சும் ஊக்குவிக்க வேண்டுமெனக் கோரியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பாதுகாப்பை காரணங்காட்டி, மாணவர்களிடமிருந்து சில பாடசாலைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். Read more

ஈரான் அல்-முஸ்தபா பல்கலைக்கழகத்தின் ஊடாக ஊவா மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பட்டப்படிப்புக்கும் அதன் செயற்பாடுகளுக்கும் ஊவாவில் தடை விதிக்குமாறு கோரி ஊவா மாகாண தமிழ்க் கல்வியமைச்சர் செந்தில் தொண்டமானால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு, ஊவா மாகாண சபையில், ஏகமனதாக அங்கிகாரம் கிடைத்துள்ளது.

அந்த பட்டப்படிப்பு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்பதனால் அதனை தடைசெய்யுமாறும், இரகசிய பொலிஸாரினால் விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென்றும் அந்த யோசனையில் குறிப்பிடப்பட்டிருந்தது. Read more

சிங்கள மொழியை, முஸ்லிம் மக்களின் தாய் மொழியாக பெயரிட்டு நாடாளுமன்றில் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என பேருவளை நகர முதல்வர் மஷைல் மொஹமட் தெரிவித்துள்ளார்.

பேருவளை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு உரையாற்றியபோதே அவர் இதனை கூறியுள்ளார். முஸ்லிம் மக்கள் பலர் இன்று சிங்களத்தில் உரையாற்றமுடியாத நிலையில் உள்ளனர். சிலர் காவற்துறை நிலையங்களுக்கு சென்று சுயமாக முறைப்பாடுகளை கூட முன்வைக்க முடியாத நிலையில் உள்ளனர். Read more