தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்த 2 பேர் ஹொரவபொத்தான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினரால் குறித்த நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குல்களுடன் தொடர்புடைய சஹ்ரானுடைய நண்பர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள இருவரும் ஹொரவபொத்தான பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர் மற்றும் பதில் அதிபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஹொரவபொத்தான, வீரசோலை, பத்தேவ பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.