சிங்கள மொழியை, முஸ்லிம் மக்களின் தாய் மொழியாக பெயரிட்டு நாடாளுமன்றில் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என பேருவளை நகர முதல்வர் மஷைல் மொஹமட் தெரிவித்துள்ளார்.

பேருவளை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு உரையாற்றியபோதே அவர் இதனை கூறியுள்ளார். முஸ்லிம் மக்கள் பலர் இன்று சிங்களத்தில் உரையாற்றமுடியாத நிலையில் உள்ளனர். சிலர் காவற்துறை நிலையங்களுக்கு சென்று சுயமாக முறைப்பாடுகளை கூட முன்வைக்க முடியாத நிலையில் உள்ளனர். சிங்கள மொழி, முஸ்லிம் மக்களின் தாய் மொழியாக இருக்குமாயின் தற்போதைய பிரச்சினைக்கு அது தீர்வாக அமைந்திருக்கும். இந்தநிலையில், சிங்கள மொழி, முஸ்லிம் மக்களின் தாய் மொழி என பெயரிட்டு தற்போதாவது நாடாளுமன்றில் யோசனை நிறைவேற்றுமாறு பேருவளை நகர முதல்வர் மஷைல் மொஹமட் வலியுறுத்தியுள்ளார்.