யாழ். இணுவில் மத்திய கல்லூரியின் மைதானத்துக்கான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 16.05.2019 நடைபெற்றது.

புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கிராம எழுச்சித் திட்ட நிதியில் 10 இலட்சம் ரூபா செலவில் மேற்படி மைதானத்துக்கான சுற்றுமதில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் துரைசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் விருந்தினராக கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அடிக்கல்லினை நாட்டிவைத்தார். நிகழ்வில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், பிரதேசசபை உறுப்பினர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தார்கள்.