அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில், நேற்று மாலை மின்னல் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். காஞ்சூரங்குடா – சிறிவள்ளிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 15) என்ற சிறுவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றிருந்த வேளையிலேயே, மின்னல் தாக்குதல்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.