இறுதி யுத்தத்தில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 10ஆம் ஆண்டு நினைவுதினம் வடக்கு கிழக்கில் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்து மலர்மாலை அனுவித்து, மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமி ராகினி இன்று பொது ஈகைச்சுடரினை முதன்முறையாக ஏற்றிவைத்திருந்தார். இன்றைய அஞ்சலி நிகழ்வில் மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், சிவில் சமூகத்தினர், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.