இலங்கையில் செயற்படுகின்ற முக்கியமான சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குவைத்திலுள்ள இலங்கை தூதுவராலயத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு,

இலங்கையை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் 10 இணையத் தளங்களுக்கும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை அவசர கணினி நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு சைபர் தாக்குதலுக்கு இலக்கான, இணையத்தளங்களின் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, இலங்கை அவசர கணினி நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.