பிரித்தானியாவில் இருந்து அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகள் நாடு கடத்தப்படுகின்றமைக்கு, துன்புறுத்தல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

நாடுகடத்தப்படுகின்ற ஏதிலிகள் அவர்களது சொந்த நாடுகளில் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு பிரித்தானியா 43 இலங்கை ஏதிலிகளை பலவந்தமாக நாடுகடத்தி இருந்தது. இது மிகவும் கண்டனத்துக்குரியதும் ஆபத்தானதுமான செயற்பாடு என்று துன்புறுத்தல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.