யாழ். சண்டிலிப்பாய், சுன்னாகம், கோப்பாய், ஏழாலை போன்ற பகுதிகளில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ஊடாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் விசேட நிதியொதுக்கீட்டில்

புதிதாக கொங்கிறீட் போடப்படவுள்ள வீதிகளை பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்களுடன் 16.05.2019 அன்று நேரில் சென்று பார்வையிட்டார். பாராளுமன்ற உறுப்பினருடன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஊர்ப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.