மடாடுகம, கிரலவ பாலத்திற்கு அருகில் இருந்து ஒரு தொகை தோட்டாக்கள் மற்றும் இராணுவ சீருடை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த தோட்டாக்கள் மற்றும் இராணுவ சீருடையும் கண்டிபிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது 12 தோட்டாக்களும் இலங்கை இராணுவத்தின் சீருடையும் கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் குறித்த தோட்டாக்கள் மற்றும் இராணுவ சீருடை கெகிராவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.