Header image alt text

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொர்புடைய பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு முகாம் குருநாகல் அலகோலதெனிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கு தெங்கு காணியொன்றில் இவ்வாறு அவர்கள் பயிற்சி முகாமை நடத்திச் சென்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற மொழிபெயர்பாளரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய குருணாகல் பொலிஸ் நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த நபரை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. குறித்த நபர் நேற்று குருணாகல் விஷேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட குறித்த நபர் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நீண்ட கால உறுப்பினர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read more

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பபான அல்கைதாவின் யுத்தப் பயிற்சிகள் தொடர்பான இறுவட்டு ஒன்றை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை, திருகோணமலை ஜமாலியா பிரதேசத்தில் வைத்து, பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த இப்ராஹீம் ஷா மஹ்ரூப் (55வயது) என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போது, அல் கைதாஇயக்கத்தின் யுத்தப் பயிற்சிகள் அடங்கிய இறுவட்டுகள் 2 கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more

யாழ். கோண்டாவில் பகுதியில் புகையிரதத்தில் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று மாலை 6.30 மணியளவில் கொழும்பில் இருந்து பயணித்த இரவு நேர தபால் புகையிரத்திலேயே குறித்த நபர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சுன்னாகம் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய மரியாலின் சகாயநேசன் எனும் நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. Read more

கடந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு துருக்கியில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை துருக்கியின் பட்டிதுல்லா எனப்படும் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய 50பேர் அடங்கிய குழுவொன்று இலங்கைக்கு வருகைத தந்துள்ளனரென நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க அண்மையில் தெரிவித்துள்ள நிலையில் குறித்த குழுவினர் தொடர்பில்இ எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. Read more

நாடாளுமன்றத்தில் உரைபெயர்ப்பாளராக கடமையாற்றிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, குருநாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் தேசிய தெவ்ஹீத் ஜமாய்த் அமைப்பின் பல்வேறு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார். உரைபெயர்ப்பாளர் கைதுசெய்யப்பட்டுள்ள விடயம் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான குவைட் தூதரகம் உள்ளிட்ட டொட் எல்.கே மற்றும் டொட். கொம் ஆகிய முகவரிகளைக் கொண்ட 11 இணையத்தளங்கள் மீது நேற்று இணையவழித் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

தற்போது இந்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு குறித்த இணையத்தளங்கள் நேற்றுமாலையுடன் வழமைக்கு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இணையத்தளங்களின் தகவலை திரிபுப்படுத்தி இணையவழி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. Read more