கடந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு துருக்கியில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை துருக்கியின் பட்டிதுல்லா எனப்படும் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய 50பேர் அடங்கிய குழுவொன்று இலங்கைக்கு வருகைத தந்துள்ளனரென நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க அண்மையில் தெரிவித்துள்ள நிலையில் குறித்த குழுவினர் தொடர்பில்இ எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. எனினும் இவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.