யாழ். கோண்டாவில் பகுதியில் புகையிரதத்தில் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று மாலை 6.30 மணியளவில் கொழும்பில் இருந்து பயணித்த இரவு நேர தபால் புகையிரத்திலேயே குறித்த நபர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சுன்னாகம் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய மரியாலின் சகாயநேசன் எனும் நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை மன்னம்பிட்டி ஆச்சிபோக்கு பகுதியில் இன்று அதிகாலை ஒருவர் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

செவனபிட்டி பகுதியில் புகையிரத கடவை பாதுகாவலராக கடமையாற்றிய 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.