நாடாளுமன்றத்தில் உரைபெயர்ப்பாளராக கடமையாற்றிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, குருநாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் தேசிய தெவ்ஹீத் ஜமாய்த் அமைப்பின் பல்வேறு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார். உரைபெயர்ப்பாளர் கைதுசெய்யப்பட்டுள்ள விடயம் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.