உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொர்புடைய பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு முகாம் குருநாகல் அலகோலதெனிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கு தெங்கு காணியொன்றில் இவ்வாறு அவர்கள் பயிற்சி முகாமை நடத்திச் சென்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை ஏப்ரல் 21ம் திகதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் நேரடி தொடர்புடைய மேலும் மூன்று பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் அம்பாறை மற்றும் கல்முனை பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.