இலங்கைக்கான குவைட் தூதரகம் உள்ளிட்ட டொட் எல்.கே மற்றும் டொட். கொம் ஆகிய முகவரிகளைக் கொண்ட 11 இணையத்தளங்கள் மீது நேற்று இணையவழித் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

தற்போது இந்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு குறித்த இணையத்தளங்கள் நேற்றுமாலையுடன் வழமைக்கு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இணையத்தளங்களின் தகவலை திரிபுப்படுத்தி இணையவழி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இவ்வாறு அனுமதியின்றி பிரவேசித்து தாக்குதலுக்கு உள்ளான இணைத்தளங்களுள், தனியார் நிறுவனங்கள், ரஜரட்ட பல்கலைக்கழக இணையத்தளம் மற்றும் தேயிலை ஆராச்சி நிலையத்தின் இணையத்தளம் என்பனவும் உள்ளடங்குகின்றன.

தமிழ் ஈழம் சைபர் போஸ் என்ற குழுவினால் சைபர் மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. சைபர் தாக்குதலின் பின்னணியில் இந்த குழுவே உள்ளதாக அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.