தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற மொழிபெயர்பாளரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய குருணாகல் பொலிஸ் நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த நபரை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. குறித்த நபர் நேற்று குருணாகல் விஷேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட குறித்த நபர் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நீண்ட கால உறுப்பினர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நபர் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பிரதான அறிவுரையாளர் என தெரிவிக்கப்படுகின்றது. ஜமால் டி. ஜவ்ஷாட் எனும் குறித்த நபர், 12 வருடங்களாக பாராளுமன்ற மொழிபெயர்பாளராக கடையாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.