ஐ.எஸ் அமைப்பு குறித்த குறுந்தகவலொன்றை (SMS) தனது கையடக்கத் தொலைப்பேசியில் வைத்திருந்த இளைஞர் ஒருவரை எல்ல பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

எல்ல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து எல்ல நகரில் இளைஞரொருவரைக் கைது செய்த பொலிஸார், குறித்த இளைஞனின் கையடக்கத் தொலைப்பேசியை சோதனை செய்தபோது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு குறித்த குறுந்தகவலொன்று இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இளைஞன் தொடர்ந்தும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், குறித்த குறுந்தகவலை அனுப்பிய மேலுமொரு இளைஞரையும், கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.