வீட்டுத் தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சி.4 ரக வெடி பொருட்கள் 270 கிராம் மற்றும் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா உடையொன்றையும் பொலிஸார் மீட்டதுடன், குறித்த வீட்டுத் தோட்டத்தின் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.

புத்தலைப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, பிபிலைப் பகுதியின் கொன்கல்லந்த என்ற இடத்தில் அமைந்துள்ள வீடொன்றைச் சுற்றி வளைத்துத் தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர். இதன்போது குறித்த வீட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த பொதியைக் கண்டெடுத்துள்ள பொலிஸார் குறித்த பொதியிலிருந்து 270 கிராம் எடையுடன் கூடிய சீ.4 ரக வெடிபொருட்களும், முஸ்லீம் பெண்கள் அணியும் புர்கா உடையொன்றும் மீட்கப்பட்டது. இதையடுத்து வீட்டுரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பேபிட்டிய, குருந்துவத்த, பிடவல, அக்குரெஸ்ஸ,கருணாசேனபுற ஆகிய பிரதேசங்களில், நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, சந்தேகத்தின்பேரில் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸார் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனரென, பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.