2008-09 காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7பேரின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் தடுப்பில் உள்ள சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்ற நேவி சம்பத் உள்ளிட்ட 7பேரும் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்களை எதிர்வரும் 29ம்திகதி வரையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதேவேளை, மாவனெல்லையில் புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 13 பேரின் விளக்கமறியல் காலமும் நீடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் ஜுன் மாதம் 6ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.