28 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் விசேடப் படையினரால் கைதுசெய்யப்பட்டு, கலகெதர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

59 வயதுடைய அப்துல் ஜவார் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை மாஓயாவிலிருந்து 1,475 அலைபேசி சிம் அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று மாஓயாவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சிலரால் இந்த சிம் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பையொன்றில் போடப்பட்டுவாறு இவை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞர்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் அவற்றை மீட்டுள்ளனர்.