கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலை பணியாளர்கள் 08 பேரையும் எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டி காவற்துறையினர் கோரிக்கை விண்ணப்பம் முலம் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைவாக கொழும்பு மேலதிக நீதவானால் இந்த அழைப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த செப்பு தொழிற்சாலை கொழும்பு சினமன் கிரான்ட் உணவகத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட இன்சாப் அஹமட் ஈப்ராஹிமுக்கு சொந்தமானது.தாக்குதலின் பின் அதன் 9 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டனர். எனினும், இதன்போது பிணை நிபந்தனைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத சந்தேகநபரொருவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அதேபோல், குறித்த சம்பவத்தினை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மேற்படி தொழிற்சாலையின் மற்றுமொரு ஊழியர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.