வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவந்த பிரதம பொலிஸ் பரிசோதகர் காமினி செனரத் ஹேவாவிதாரன, உடன் அமுலுக்கு வரும் வகையில் காலி பொலிஸ் பிரிவிற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையின் ஊழியர்கள் 32பேர் விணையில் விடுதலையானமை குறித்த விசாரணைகள் தொடர்பிலேயே வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட, வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை உரிமையாளர் மொஹம்மட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட்டுக்காக பிரார்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட வந்ததாக சந்தேகிக்கப்படும் மௌலவி ஐவர் உட்பட 32 பேர் வெல்லம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த 32 பேரும் பிணையில் சென்றமை குறித்த விசாரணைகள் நிமித்தம் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி காலி பொலிஸ் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.