Header image alt text

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அமோக வெற்றிபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்,
அவர் அனுப்பிய கடிதத்தில்,

‘தமிழகத்தில் மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றிபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்திற்;கும், அவ் வெற்றிக்கு அடித்தளமிட்ட கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிற்கும் எமது கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சார்பில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க முழுமையாக உழைத்த கலைஞரின் வழிநின்று செயலாற்றி வரும் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தலைவரும் எங்கள் மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு தொடர்ந்தும் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டுமென உரிமையுடன் எதிர்பார்க்கின்றோம்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி கையொப்பமிட்ட கடிதம் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு இன்று வழங்கப்பட்டதை அடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஞானசார தேரர் விடுதலையை முன்னிட்டு அவரை வரவேற்பதற்காக அதிகளவிலான தேரர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தை சூழ காத்திருந்தனர். நீதிமன்றத்தை அவமதித்ததாக ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டு 2018 ஆகஸ்ட் 8 ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. Read more

முகத்தை மூடுவது தொடர்பாக அவசர கால சட்ட விதிகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள் குறித்து புரியாததன் காரணமாக முகத்தை மூடிய வகையில் சில நபர்கள் பாடசாலைக்கு வருதல், அதே போன்று சில ஆசிரியர்கள் முகத்தை மூடிய வண்ணம் உடை அணிந்துக் கொண்டு வந்ததன் காரணமாக கடந்த சில தினங்களில் பாடசாலைக்கு வந்ததன் காரணமாக பிரச்சினைகள் ஏற்பட்டன.

இந்த நிலைமை தொடர்பில் கூடுதலாக கவனம் செலுத்திய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இந்த சம்பவங்களின் பாடசாலை முக்கியஸ்தர்கள் தலையிட வேண்டிய முறை மற்றும் பாடசாலைக்கு பிரவேசிக்கும் பொழுது முகத்தை மூடிய வண்ணமான ஆடை மற்றும் பாதுகாப்பு கவசம் அணிவது தொடர்பில் கட்டளைகள் அடங்கிய விஷேட கடிதம் ஒன்றை அனுப்பி வைப்பதற்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். Read more

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மாணவர்கள் இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

மாணவர்கள் நேற்று முதல் ஆரம்பித்துள்ள வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலேயே மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்தினை அவர்கள் நடத்தியிருந்தனர். ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்து அனைத்து பல்கலைக்கழகங்களின் கற்றல் நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டது. Read more

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பின் ‘சாத்தானின் தாய்’ வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டுகள் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் உதவியுடன் இலங்கையிலேயே தயாரிக்கப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. இதனால் இந்தக் குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது. Read more

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ம் திகதிமுதல் ஜூன் 02ம் திகதிவரை வைத்திய தேவைக்காக சிங்கப்பூர் செல்ல அனுமதி வழங்குமாறு அவரது சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார். எனவே கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை தற்காலிகமாக நீக்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். Read more

வவுனியா நகரசபை தேசிய அரச பொது ஊழியர் சங்கத்தின் செயலாளரினால் வவுனியா நகரசபை சுகாதாரப்பகுதி தொழிலாளர் ஒருவருக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையின் சுகாதாரப்பகுதி தொழிலாளர் ஒருவருக்கே நேற்று முன்தினம் நகரசபை பொது நூலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரும் தேசிய அரச பொது ஊழியர் சங்கத்தின் செயலாளருமான கோல்டன் என்பவருக்கு எதிராகவே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more

2019ம் ஆண்­டுக்­கான கல்விப் பொதுத் தரா­தர சாதா­ர­ண­தர பரீட்­சைக்கு பாட­சாலை மட்­டத்­திலும் தனிப்­பட்ட ரீதி­யிலும் விண்­ணப்­பிப்­ப­தற்­கான கால எல்லை இம்­மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் சனத் பூஜித தெரி­வித்­துள்ளார்.

டிசம்பர் மாதம் இடம்­பெ­ற­வுள்ள கல்விப் பொதுத் தரா­தர சாதா­ர­ண­தர பரீட்­சைக்கு விண்­ணப்­பிக்க விரும்பும் அரச சேவை­யி­லுள்ள அலு­வ­லர்கள் தற்­போ­துள்ள முறை­மைக்­க­மை­வாக தமது விண்­ணப்ப படி­வத்­தினை கிராம அலு­வ­லர்­களால் உறு­திப்­படுத்த இய­லாத சந்­தர்ப்­பத்தில் உரிய நிறு­வனத் தலைவர் மூல­மாக சமர்­ப்பிக்­கப்­படும் விண்­ணப்­பங்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். Read more

இலங்கையில் காட்சிப்படுத்தப்படும் பெயர் பதாதைகள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு பணிப்புரை வழங்கியிருக்கின்றார்.

இந்த மூன்று மொழிகளும் தவிர்ந்த வேறு மொழிகளை பயன்படுத்தக் கூடாது என்றும் பிரதமர் உத்தரவிட்டிருக்கின்றார். (அரசாங்க தகவல் திணைக்களம்)

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைப் பீடமும், பிரயோக விஞ்ஞான பீடமும் வவுனியா வளாகத்தில் நடத்தப்படுகின்றன. பாடநெறிகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஆங்கில மொழியில் கற்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்தல் தொடர்பாக நேற்று அமைச்சரவையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. யாழ் பல்கலைக்கழகத்தில் வர்த்தகக் கல்வி மற்றும் வணிக விஞ்ஞானம் போன்ற பீடங்கள் வவுனியா வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. Read more