மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அமோக வெற்றிபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்,
அவர் அனுப்பிய கடிதத்தில்,

‘தமிழகத்தில் மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றிபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்திற்;கும், அவ் வெற்றிக்கு அடித்தளமிட்ட கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிற்கும் எமது கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சார்பில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க முழுமையாக உழைத்த கலைஞரின் வழிநின்று செயலாற்றி வரும் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தலைவரும் எங்கள் மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு தொடர்ந்தும் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டுமென உரிமையுடன் எதிர்பார்க்கின்றோம்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.