Header image alt text

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தெடார்புடைய சந்தேகநபர்களின் 41 வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் பொறுப்பில் உள்ள சில சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளாக இவை அடையாளம் காணப்பட்டுள்ளன. Read more

இலங்கைக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட அச்சுறுத்தல் நிலைமை மாறி, நாடும் நாட்டு மக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ள நிலையில், இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு, வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையைத் தளர்த்துமாறும், பிரதமர் கோரியுள்ளார். Read more

பொதுபலசேனாவின் பௌத்தமதகுரு ஞானசாரதேரரிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதன் காரணமாக ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் குடும்பத்தவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என ஊடகவியலாளரின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளமையால் எனது குடும்பத்தவர்களின் உயிர்களிற்கு பாரதூரமான ஆபத்து ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், உரிய பாதுகாப்பை வழங்குமாறும் பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார். Read more

களுத்துறை மாவட்டம் பதுரலிய-திக்ஹேன கனிஷ்ட வித்தியாலயத்துக்கு அருகாமையிலிருந்து, 13 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக, பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைக்கு அருகில் பொதியொன்று இருப்பதாக, பாடசாலை காவலர் நேற்று இரவு, பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய, கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில், பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பிந்திய செய்திகளின்படி, Read more

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு மற்றும் அதன் தலைவர் சஹ்ரான் ஹாஸிமுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகவும் முஸ்லிம் பிரிவினைவாதம் தொடர்பான பிரசங்கங்களை நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டுகளின் கீழ்,

அபிவிருத்தி உதவியாளர் உட்பட ஆறு பேரை, ஹொரவப்பொத்தானயின் கிவுலகட மற்றும் கெப்பத்திகொல்லாவயின் எல்லேவ ஆகிய பிரதேசங்களில் வைத்து, இன்று கைதுசெய்திருப்பதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

மட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியில் பாலம் ஒன்றின் கீழிருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லாவெளி, காக்காச்சிவெட்டையைச் சேர்ந்த 38வயதான கே. கரிகரன் என்னும் இரு பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று அதிகாலை வீட்டிலிருந்து சென்றிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் உறவினர்களால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. Read more

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று மியன்மாரில் கைது செய்யப்ட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சுமார் 250 பேரைக் கொல்லப்பட்டனர். 39 வயதுடைய அப்துல் சலாம் இர்ஷாட் மொஹமட் என்ற இலங்கையரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. Read more

பலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் அங்கு நிவாரண விலையில் விமான சேவை வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

முதற்கட்டப் பணிகளின் கீழ் விமான பயண சீட்டுக்கான கட்டணம் வருடம் முழுவதும் நிவாரண முறையில் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இரத்மலான விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு மத்தள, மட்டக்களப்பு, சீகிரிய, பலாலி ஊடாக Read more

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால், பப்புவா நியுகினியில் உள்ள மானஸ் மற்றும் நவுறு ஆகிய தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகள் மத்தியில் தற்கொலை செய்துக் கொள்ளும் நிலைமை அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. 2013ம் ஆண்டு முதல் அவுஸ்திரேலிய அரசாங்கம் பின்பற்றி வருகின்ற ஏதிலிக் கொள்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதன்கீழ் ஏதிலிகள் குறித்த தீவுகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்படுவதால், மனதளவில் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாகி, தற்கொலை செய்துக் கொள்ளும் நிலைமை அதிகரித்திருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். பருத்தித்துறை வீதியில் கோப்பாய் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கைச் சேர்ந்த 63 வயதான எஸ். செல்வராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் சந்திக்கு அருகில் வீதியை கடக்க முற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, படுகாயமடைந்த முதியவரை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் ஏற்கெனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். Read more